Friday, March 18, 2011

கொங்கதேச பசுவினங்கள் (Bos indicus)

1.  மீகொங்கமாடு (மேகரை மாடு அல்லது காங்கயம் மாடு)  : சாமானியர்களால் இவ்வகை "கொங்கன்" என்றும் கன்னடத்தில் "கங்கநாடு" என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இத்தேசத்துள் இருபத்திநாலு நாட்டுப்பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றான காங்கயநாட்டில் உருவாகும் ஆவினங்களே காங்கயம் என்று அழைக்கப்படுகின்றன. இவை இன்றைய சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, பவானி, ஈரோடு, திருப்பூர், கோவை, பல்லடம், அவினாசி, பொள்ளாச்சி, காங்கயம், தாராபுரம், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், திண்டுக்கல், அரவக்குறிச்சி, கரூர் ஆகிய காவேரியாற்றிற்கு மேற்குப்பகுதியில் தாலுகாக்களில் உள்ள இயற்கை சூழ்நிலையில் நன்றாக விருத்தி அடைகின்றன. கொங்கு வெள்ளாள கவுண்டர்களால் விருத்தியானது, அவர்கள் சரித்திரம், வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.


காங்கயம் எருது

2. சேரதேசம் - மழகொங்கமாடு (கீகரை மாடு அல்லது திருச்செங்கொடு மாடு): இவ்வகை கொங்கத்தின் கீழ்ப்புறம் அதிகமுள்ளன - உருவத்தில் மேகாட்டு மாடுகளைப் போலவே ஆனால் சிறிதாக இருக்குமாயினும் மேற்கத்தி இனத்தைவிட பால்வளமும் பஞ்சம் தாங்கும் தன்மையும் அதிகமுடையவை - இன்று கேரளாவுக்கு அன்றாடம் பத்து வண்டிகள் செல்வதால் மிக அருகிவிட்டன. செயற்கை விந்து செலுத்தல் மூலம் காங்கயம் விந்து செலுத்தப்பட்டு வருவதாலும் சுத்தத்தன்மை குறைந்துவிட்டது. மேச்சேரி, ஓமலூர், நங்கவல்லி, சேலம், சங்ககிரி, ஆத்தூர், கங்கவல்லி, ராசிபுரம், நாமக்கல், காட்டுப்புத்தூர், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய காவேரிக்கு கிழக்குப்பகுதியே இதன் இயல் சூழ்நிலை. கொங்கு வெள்ளாள கவுண்டர்களால் விருத்தியானது. அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.


கீகரை கொங்கமாட்டு (திருச்செங்கோடு அல்லது சேலம் பசுக்கள்)


3. சேரதேசம் - செம்மரை மாடு (மலையன் அல்லது செம்மரை அல்லது பர்கூர்): இவ்வகை அந்தியூர் மலைப்பகுதியில் உள்ளவை, சிகப்பு - வெள்ளை நிறம் கலந்து இருக்கும். இதற்கு மேற்கில் கர்னட பூரணய்யா மாடுகளை ஒத்த ஆனால் உருவத்தில் சிறிதான ஒரு இனம் உள்ளது. ஒட்டத்தில் சிறந்தது ஆயினும் அடம் பிடிக்கும். மலைப்பகுதி கன்னட லிங்காயத்துகளால் (லிங்கங்கட்டி) பேணப்படுகிறது. அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.

                          பர்கூர் காளை


4. சேரதேசம் - ஆலாம்பாடி மாடு மேட்டூர், பெண்ணாகரம், தர்மபுரி, கொள்ளேகாலம், பெங்களூர், பவானி ஆகிய தாலுக்காக்களில் உற்பத்தியாகிறது. இது சவாரி வண்டிகளுக்கு ஏற்றது. கொங்கு வெள்ளாள கவுண்டர்கள், லிங்காயத்துகள், வன்னியர், வொக்கிலியரால் பேணப்படுகிறது.

                      ஆலாம்பாடி காளை

    ஆலாம்பாடி பசுக்கள் (கருப்பாக உள்ளவை) 


5. சேரதேசம் - பாலமலை மாடு:  சேலம் ஜில்லா மேட்டூர் தாலுகாவிலும்  அருகில் ஈரோடு ஜில்லா பவானி தாலுகா பாலமலையில் மலையாள கவுண்டர்களாலும் (மலை ஜாதி), கிழே சில கொங்க வெள்ளாளர்களும் வளர்கின்றனர். ஆலாம்பாடி மற்றும் பர்கூருடன் குழப்பிக்கொள்ளபபடுவது. கிட்டத்தட்ட அழிந்து விட்டது.


                                                                 பாலமலை மாடு 



























6. சேரதேசம் - கொல்லிமலை மாடுகள்:
 கொல்லி, சேரவராயன், பச்சைமலை கல்வராயன் மலைகளில் காணலாம் கொங்கமாடுகளின் குட்டை வடிவம் போல இருக்கும் இவை நோய் எதிர்ப்பு சக்தியும் இலையுதிரா காடுகளின் சுழ்நிலைக்கு ஏற்றவை ஆதலால் இப்பகுதி பூர்வீகர்களான மலையாளிகளால் வளர்க்கப்படுபவை. 

























கொல்லிமலையில் 



1 comment:

  1. படங்கள் அனைத்தும் விளக்கத்துடன் அழகாக விவரித்துள்ளீர்கள்... நன்றி.

    தாங்கள் வெளியிட்டுள்ள ஒரு படத்தை மட்டும் எடுத்துக்கொள்கிறேன், தங்கள் அனுமதியின்றி.

    ReplyDelete