Friday, March 18, 2011

கொங்கதேச பசுவினங்கள் (Bos indicus)

1.  மீகொங்கமாடு (மேகரை மாடு அல்லது காங்கயம் மாடு)  : சாமானியர்களால் இவ்வகை "கொங்கன்" என்றும் கன்னடத்தில் "கங்கநாடு" என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இத்தேசத்துள் இருபத்திநாலு நாட்டுப்பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றான காங்கயநாட்டில் உருவாகும் ஆவினங்களே காங்கயம் என்று அழைக்கப்படுகின்றன. இவை இன்றைய சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, பவானி, ஈரோடு, திருப்பூர், கோவை, பல்லடம், அவினாசி, பொள்ளாச்சி, காங்கயம், தாராபுரம், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், திண்டுக்கல், அரவக்குறிச்சி, கரூர் ஆகிய காவேரியாற்றிற்கு மேற்குப்பகுதியில் தாலுகாக்களில் உள்ள இயற்கை சூழ்நிலையில் நன்றாக விருத்தி அடைகின்றன. கொங்கு வெள்ளாள கவுண்டர்களால் விருத்தியானது, அவர்கள் சரித்திரம், வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.


காங்கயம் எருது

2. சேரதேசம் - மழகொங்கமாடு (கீகரை மாடு அல்லது திருச்செங்கொடு மாடு): இவ்வகை கொங்கத்தின் கீழ்ப்புறம் அதிகமுள்ளன - உருவத்தில் மேகாட்டு மாடுகளைப் போலவே ஆனால் சிறிதாக இருக்குமாயினும் மேற்கத்தி இனத்தைவிட பால்வளமும் பஞ்சம் தாங்கும் தன்மையும் அதிகமுடையவை - இன்று கேரளாவுக்கு அன்றாடம் பத்து வண்டிகள் செல்வதால் மிக அருகிவிட்டன. செயற்கை விந்து செலுத்தல் மூலம் காங்கயம் விந்து செலுத்தப்பட்டு வருவதாலும் சுத்தத்தன்மை குறைந்துவிட்டது. மேச்சேரி, ஓமலூர், நங்கவல்லி, சேலம், சங்ககிரி, ஆத்தூர், கங்கவல்லி, ராசிபுரம், நாமக்கல், காட்டுப்புத்தூர், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய காவேரிக்கு கிழக்குப்பகுதியே இதன் இயல் சூழ்நிலை. கொங்கு வெள்ளாள கவுண்டர்களால் விருத்தியானது. அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.


கீகரை கொங்கமாட்டு (திருச்செங்கோடு அல்லது சேலம் பசுக்கள்)


3. சேரதேசம் - செம்மரை மாடு (மலையன் அல்லது செம்மரை அல்லது பர்கூர்): இவ்வகை அந்தியூர் மலைப்பகுதியில் உள்ளவை, சிகப்பு - வெள்ளை நிறம் கலந்து இருக்கும். இதற்கு மேற்கில் கர்னட பூரணய்யா மாடுகளை ஒத்த ஆனால் உருவத்தில் சிறிதான ஒரு இனம் உள்ளது. ஒட்டத்தில் சிறந்தது ஆயினும் அடம் பிடிக்கும். மலைப்பகுதி கன்னட லிங்காயத்துகளால் (லிங்கங்கட்டி) பேணப்படுகிறது. அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.

                          பர்கூர் காளை


4. சேரதேசம் - ஆலாம்பாடி மாடு மேட்டூர், பெண்ணாகரம், தர்மபுரி, கொள்ளேகாலம், பெங்களூர், பவானி ஆகிய தாலுக்காக்களில் உற்பத்தியாகிறது. இது சவாரி வண்டிகளுக்கு ஏற்றது. கொங்கு வெள்ளாள கவுண்டர்கள், லிங்காயத்துகள், வன்னியர், வொக்கிலியரால் பேணப்படுகிறது.

                      ஆலாம்பாடி காளை

    ஆலாம்பாடி பசுக்கள் (கருப்பாக உள்ளவை) 


5. சேரதேசம் - பாலமலை மாடு:  சேலம் ஜில்லா மேட்டூர் தாலுகாவிலும்  அருகில் ஈரோடு ஜில்லா பவானி தாலுகா பாலமலையில் மலையாள கவுண்டர்களாலும் (மலை ஜாதி), கிழே சில கொங்க வெள்ளாளர்களும் வளர்கின்றனர். ஆலாம்பாடி மற்றும் பர்கூருடன் குழப்பிக்கொள்ளபபடுவது. கிட்டத்தட்ட அழிந்து விட்டது.


                                                                 பாலமலை மாடு 



























6. சேரதேசம் - கொல்லிமலை மாடுகள்:
 கொல்லி, சேரவராயன், பச்சைமலை கல்வராயன் மலைகளில் காணலாம் கொங்கமாடுகளின் குட்டை வடிவம் போல இருக்கும் இவை நோய் எதிர்ப்பு சக்தியும் இலையுதிரா காடுகளின் சுழ்நிலைக்கு ஏற்றவை ஆதலால் இப்பகுதி பூர்வீகர்களான மலையாளிகளால் வளர்க்கப்படுபவை. 

























கொல்லிமலையில் 



Thursday, March 17, 2011

கொங்கதேச முயல் இனங்கள்:

நாட்டு மொச (Lepus nigricollis):
பாரதம் முழுவதும் காணப்படுவது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இயற்கையாக மட்டுமே வளர்க்க முடியும்.

கொங்கதேச பூனை இனங்கள்:

நாட்டுப்பூனை:
நோய் எதிர்ப்புசக்தி அதிகம். தானாகவே தீனி தேடிக்கொள்ளும். சர்க்காரின் கலப்படமயத்தில் இதுமட்டும் ஓரளவு தப்பித்துள்ளது.




கொங்கதேச எருமை இனங்கள்:

நாட்டெருமை:
கொம்பு நீளமாக பின்னோக்கியும், தலை குனிந்தவாரும் இருக்கும். எதிர்ப்பு சக்தி அதிகம், தீனி குறைவு. வண்டி இழுக்கவும், சேற்றுழவுக்கும் பயன்படும்.
சர்க்கார் முர்ரா (டில்லி எருமை) இனத்தை கலந்து இவ்வினைத்தையே கிட்டத்தட்ட அழித்துவிட்டது. முர்ரா கிடாய்கள் வேலைக்கு ஆகாதவை. ஆதலால் கறிக்கு விற்கப்படுகின்றன. பள்ளர் மற்றும் கல் ஒட்டர் இனத்தவர்களால் விருத்தி செய்யப்பட்டது.






மேலுள்ளவை கொங்கதேச நாட்டெருமைகள். கீழே முர்ரா

முர்ரா (டில்லி) எருமை - கொம்பு மேல்நோக்கி சுருண்டது, தலை நிமிர்ந்தது
(ஒப்புநோக்குவதற்காக)

மலை எருமை:
ஊட்டிக்குக் கிழக்கிலிருந்து, தாளவாடி, பர்கூர், கொள்ளேகாலம், மேலகிரி மலைகள் வரை காணப்படுவது. உருவத்தில் சிறியது. கொம்புகள் நேராக பின்னே செல்லும். அடிப்பகுதி சிவந்து காணப்படும்.
மலை எருமைகள்

தோடர் எருமை:
நீலகிரி தோடர்களது இனம். தோடர்களது வாழ்வியலோடு பிண்ணிப்பிணைந்தது. நீலகிரி தட்பவெப்பத்துக்கு ஏற்றது. ஆக்ரோஷமானது.

தோடர் எருமை

கொங்கதேச வாத்து இனங்கள்:

நாட்டுவாத்து:
சீமை வாத்து போன்று நோய்த்தாக்குதல் இல்லை. சீதோஷண நிலைக்கு  ஏற்றது, ஆதலால் பராமரிப்பு சுலபம். தீனி அதுவாகவே தேடிக்கொள்ளும்.


கொங்கதேச கோழியினங்கள்:

நாட்டுக்கோழி (Gallus gallus murghi):
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், தீனி தனியாக வேண்டியதில்லை.ன் சேவல் சண்டைக்குப் பெயர்போனது. பலிபுசைகளுக்கு உகந்தது.


கொங்கதேச குதிரை இனங்கள்:

 பழனி மட்டம் இனம். சவாரி வண்டிகளுக்கு ஏற்றது.


ஆயினும் முற்காலக் குதிரைகள் Equus sivalensis, Equus namadicus 


வகைகளைச் சேர்ந்த நாட்டுக்குதிரைகள். இவை அழிந்து மத்தியாசிய குதிரைகளின் வம்சாவளி மட்டுமே பாரதத்திலுள்ளது. பழனி மட்டம் கூட துருக்கிய குதிரை வம்சத்தின் திரிபேயாகும்.ரிக் (1.162.18),யஜுர் வேதங்களில் குறிப்பிடப்படும் குதிரையினம் 34 விலாக்களை (17 ஜோடிகள்) கொண்டதாகவும்,வெளிப்புடைத்த முகமுடையதும்,மிகவுயரமானதுமாக இருந்துள்ளது (Great Indian Horse)





 18. The four-and-thirty ribs of the. Swift Charger, kin to the Gods, the slayer's hatchet pierces.
     Cut ye with skill, so that the parts be flawless, and piece by piece declaring them dissect them

34 விலா எலும்புடையது (17 ஜோடி) அஶ்வம்

தற்போது உள்ளது மத்திய ஆசிய,அரபு குதிரைகள்தான்

இவற்றை வைத்து பூஜை ஹோமங்கள் செய்வது சீமை கொம்பு,திமில்,தாடையற்ற மாட்டை வைத்து பூஜை செய்வது போல வெளி வேஷம்தான்


चतुस्त्रिंशद वाजिनो देवबन्धोर्वङकरीरश्वस्य सवधितिःसमेति | 
अछिद्रा गात्रा वयुना कर्णोत परुष-परुरनुघुष्य वि शस्त || 

 சதுஷ்த்ரிம்ஶத் (34 விலா) வாஜினோ தேவபந்தோர்வங்கரீரஶ்வஸ்ய ஸவதிதி:ஸமேதி|
 உருவத்தில் பெரியதும்,17 ஜோடி விலா உடையதும்,முகம் வெளிப்புடைத்துக் காணப்படும் Equus sivalensis எனும் 10000 வருடங்களுக்கு முன்னிருந்த இனம்தான் அஶ்வம் எனும் நாட்டுக்குதிரை.
இது மத்திய ஆசிய,அரபு இனமான Equus equus ஆல் அழிவுற்றது.

எனவேதான் சீமை மாட்டுக்கு ஒப்பான இச்சீமைக் குதிரையை வைத்து அஶ்வமேதம் செய்யக்கூடாது என்பதால் "கலியில் அஶ்வமேதம் அசாத்தியம்" என்றானது.

சரஸ்வதி-சிந்து நதி நாகரீகத்தின் குதிரை முத்திரை:

கொங்கதேச கழுதை இனங்கள்:

நாட்டுக்கழுதைகள். பொதிசுமப்பதில் கில்லாடிகள். நோய் எதிர்ப்பு, விசுவாசம் அதிகம்.

கொங்கதேச பன்றியினங்கள்:

கரும்பன்றி (அ) நாட்டுப்பன்றி:நோயெதிர்ப்பு, பஞ்சம்தாங்குதல் ஆகியவற்றில் சிறந்தது. சர்க்கார் இதிலும் சீமைப்பன்றிக்ளைக் கலந்து குட்டிச்சுவராக்கிவருகிறது.

கொங்கதேச நாயினங்கள்:

பட்டி நாய்:நாட்டுநாய் என்று அழைக்கப்படுவது. நோய் எதிர்ப்பு, பஞ்சம் தாங்குதல் ஆகியவற்றின் உச்சகட்டம். மசை பிடித்தாலும் முடிந்தளவு உரிமையாளரைக் கடிக்காது. ஆடு, மாட்டுப்பட்டிகளில் குருவிகளைக்கூட அண்ட விடாது. விசுவாசத்திற்குப் பெயர்போனது. சர்க்கார் பல பரதேச நாய்களைக் கொண்டுவர அனுமதித்து இவ்வினத்த்தின் தன்மையைக் கெடுத்துவிட்டது. Shepherd dog. பட்டிநாயின் சில குணாதிசயங்கள்:
  1. குழந்தைகளைக்கண்டு பொறாமைப்படாது, மாறாக அவர்களைக் காக்கும்
  2. எஜமானருக்கு ஆபத்தென்றால் (பாம்புகள் போன்றவற்றால்) உயிரைக்கொடுத்துக் காப்பாற்றும்
  3. பிறர் உணவளித்தால் சரியாக உண்ணாது, அளித்தாலும் எஜமானரைத்தான் விசுவாசிக்கும்.
  4. விஷ ஜந்துக்கள் கடித்தால் மூலிகைகளை உண்டு உயிர் தப்பிக்கொள்ளும்
  5. இறக்கும் தருவாயில் எஜமானரை விட்டு விலகிச்சென்றே இறக்கும் (துக்கப்படக்கூடாதென்று).
  6. எதைக் கொடுத்தாலும் மகிழ்ச்சியாக உண்ணும்.
  7. ஆஸ்துமா, ஈசினோபிலியா போன்ற நோய்கள் சீமை நாய் சங்கார்த்தத்தால் பரவுகின்றன.
  8. நமது பாவங்களை தான் வாங்கிக்கொள்ளும். எஜமானர் உயிருக்கு ஆபத்தெனில், தான் பாவத்தை வாங்கிக்கொண்டு இறக்கும். எமனையும், பிற சக்திகளையும் காணக்கூடிய வல்லமை உள்ளதால் பைரவர் - கர்ம வினையின் அதிபதியின் வாகனமாக கையாளப்பட்கிறது. பைரவரை நமஸ்கரித்தால்தான், கர்மவினை பந்தங்கள் அழியும்.
  9. பட்டி பொங்கலன்று (மாட்டுப் பொங்கல்), ஒரு பாகம் பொங்கல் பட்டிதெய்வ பிரசாதமாக பட்டி நாய்க்கு வழங்க்கப்படும். பிற கோயில் பிரசாதங்களை வழங்க மாட்டார்கள்.
ஒரு வெள்ளையர் சொல்கிறார் கேளுங்கள்: http://morgana249.blogspot.in/2014/08/10-interesting-dog-breeds-that.html
  1. பராமரிப்பு இல்லாதது 
  2. பாரதத்தின் தேசிய பண்பாட்டு சின்னம் (அதாவது பரவர் என கடவுளாக வணங்குவது)
  3. மரபணு மாற்றங்கள் இல்லாதது 
  4. ஆதி நாயினம் 
  5. 'பார்டர் கோலி' என்ற உலகின் மிகபுத்தி கூர்மையான நாயை விட புத்தி கூர்மையானது 
  6. இதன் சிறப்புகள் அதிகமாகிக்கொண்டே போகின்றது 
  7. உலகம் முழுவதும் இதனை விரும்பி எடுத்து சென்று வளர்க்கின்றனர் 
  8. மனிதர்கள் குழப்பம் செய்யாயது 
  9. சுத்தமான இனம் 
  10. அமைதியானது 
நமது நாய்க்குக்கூட இப்பேர்பட்ட நல்ல குணங்கள் உள்ளன. ஆனால் நாமோ இவற்றைப் புறக்கணித்தும், வஞ்சித்தும் சீமை கண்றாவிகளை விரும்புகிறோம். பழக பழக பாலும் புளிக்குமாம்.


தெருநாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு

“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன. நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு: “எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும். தமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.  எனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன. உடல் முழுக்க செவலையும் வாய் பகுதி கருப்பாகவும் இருக்கும் கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது. இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது.  கருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக்கொள்ளும். பச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன. ஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால் நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெருநாய்களாக்கிவிட்டோம். நமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான். முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள்.  எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்டுப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக்கொள்ளும்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருந்தார். அவருடைய மனைவிக்கு வெளிநாட்டு நாய்கள் மீது கொள்ளை பிரியம். வீட்டில் 14 நாய்கள் வளர்த்து வந்தார். அந்த நாய்களுடன் ஒரே ஒரு நாட்டு நாயை, அந்த அதிகாரி விரும்பி வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாயை அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காது. ஒருநாள் இரவில் அவரது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர். நாட்டு நாயுடன் சேர்த்து 15 நாய்களும் சுற்றிக்கொண்டன. திருடர்கள் சாமர்த்தியமாக மயக்க பிஸ்கெட்டை தூக்கி வீசினார்கள். அனைத்து நாய்களும் ஓடிச்சென்று பிஸ்கெட்டுகளை தின்று விட்டு சாப்பிட சிறிது நேரத்திலேயே மயங்கி  விட, திருடர்கள் போட்ட பிஸ்கெட்டை சாப்பிடாத நாட்டுநாய் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். நாயின் குரைப்பு சத்தம்கேட்டு அந்த அதிகாரி வெளியே வந்து பார்த்தபோது வெளிநாட்டு நாய்கள் மயக்கத்தில் கிடந்தன. நாட்டு நாய் மட்டுமே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காரணம், நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை. வீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு. இப்போது தெருநாய்களாக்கப்பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும்.  அதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு. வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும். இன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும். தொற்று நோய்கள் பரவும். குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும். ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்கு தகுந்தாற்போல நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது.   கிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள்.  எனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி நாய் அமைக்கப்பட்டு உள்ளது.  பட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும்.  நமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப்                       பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை” என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர். தேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும். நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது.  ஏன் என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.  எனவேதான் அறிவுள்ள அந்த நாய்கள் சவாசனம்போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்... - See more at: 
http://m.dinamalar.com/weeklydetail.php?id=41454

http://www.news2.in/2017/01/love-dogs.html#sthash.fcizxRXD.dpuf


கொங்கதேச செம்மறியாட்டினங்கள்:

மேச்சேரி அல்லது மயிலம்பாடி: கொங்கத்தின் வடக்குப்பகுதிகளில் மிகப்பிரபலமானது. பெரும்பாலும் மேட்டூர், பவானி தாலுகாக்களில் பரவலாக உள்ளது. விலையுயர்ந்த ரகம்.



குறும்பயாடு:
குறும்பர் இனத்தால் வளர்க்கப்படும் இனமாதலால் இப்பெயர் ஏற்பட்டது. கறிக்காக வளர்க்கப்படும் இனம். கொங்கத்த்தின் மேற்கோட்டுப்பகுதிகளில் அதிகம் காணலாம் (கோவை ஜில்லா)

கொங்கதேச ஆட்டினங்கள்:

அக்கினி பகவானின் வாகனம் 

மோளை ஆடு அல்லது மேகரை ஆடு:இது கொங்கதேசத்தின் காவேரிக்கு மேற்குப்ப்பகுதிகளான ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ளது. மிகக்கடுமையான பஞ்சம் தாங்கும் ரகம். நோய் எதிர்ப்பு சக்தியில் முதல்தரம். கிடாய்க்குமட்டும் கொம்புகள் இருக்கும். சர்க்கார் பல ரக ஆடுகளைக் கொண்டுவந்து கலந்து தனது இனக்கலப்படப்பணியை செய்து ரகத்தின் தன்மையைக் குட்டிச்சுவராக்கியுள்ளது.



கீகரை ஆடு அல்லது கருப்பாடு:
இது காவெரிக்குக் கீழ்ப்பாகுதிகளான சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தொட்டியம் பகுதிகளில் காணப்படுகிறது. பஞ்சம் தாங்குதல் மற்றும் நொய் எதிர்ப்பில் முதல் தரம். சர்க்கார் செய்யும் இனக்கலப்பட வேலை இவ்வினத்தையும் பாதித்துள்ளது. பலிபூசைகளுக்கு விரும்பி வாங்கப்படும் இனம்.


அட்டப்பாடி பகுதியில் குறும்பர், இருளர் வளர்க்கும் ஆடுகள் இவ்வினத்தோடு தொடர்புடையவை: http://www.vechur.org/info/attappady.htm